TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

 கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக கருணை கிழங்கு இருக்கிறது. கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது.  கருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.
உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது. மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது.

நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. பெண்கள் கருணைக் கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment