TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளி திறக்கும் நாளன்று அங்கன்வாடி மையங்களில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், கடந்த டிசம்பரில், நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 2,381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில், துவக்க பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இம்மையங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, சில ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்துக்கு சென்றதால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.கடந்த, 22ம் தேதி அளித்த தீர்ப்பில், &'இடைநிலை ஆசிரியர்களை, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு நியமித்ததில் தவறில்லை&' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், பள்ளி திறக்கும் நாளன்று, அங்கன்வாடி மையங்களில், பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment