TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. அமைச்சர் உறுதி!

 சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பள்ளிகளுககு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குநரகம் கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயில் 
வெயில் அவதி
ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் இதுவை குறைந்த பாடில்லை.
சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

பகல் நேரங்களில் 
தள்ளிவைக்க கோரிக்கை
பகல் நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

தேதியை மாற்ற வாய்ப்பில்லை 
அமைச்சர் உறுதி
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க வாய்ப்பில்லை என்று கூறினார். ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

அமைச்சர் மறுப்பு 
ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு
வெயிலால் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என வெளியான செய்திக்கும் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேட்டியால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
source: oneindia.com

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment