புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு வரும் 11ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2018-19ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பயின்று, ஆண்டு இறுதித்தேர்வு எழுதி, மூன்று பாடங்கள் அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் மறு தேர்வு எழுத வேண்டிய பாடங்களை, தாங்கள் பயின்ற பள்ளிகளில் 11.6.2019 அன்று தெரிந்து கொள்ள வேண்டும்.மறு தேர்வு, காலை, மாலை இரு வேளைகளிலும் அவரவர் பயின்ற பள்ளியிலேயே நடத்தப்படும். காலை 10.௦௦ மணி முதல் 12.௦௦ வரையிலும், பிற்பகல் 2.௦௦ மணி முதல் 4.௦௦ மணி வரை தேர்வுகள் நடைபெறும்.17ம் தேதி மொழி தாள் - 1, மதியம் மொழி தாள்- 2, 18ம் தேதி ஆங்கிலம் தாள்- 1, மதியம் ஆங்கிலம் தாள் -2, 19ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 21ம் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வு நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Home / Uncategories / அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு வரும் 11ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment