ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஜூன் 8-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட்., இறுதியாண்டுத் தேர்வு ஜூன்13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தேர்வு தேதியை மாற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்தது.
0 Comments:
Post a Comment