அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்காக நடத்தப்படும் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு மே 24 முதல் 31 வரை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு, ஜூன் 8 முதல் 15 வரை நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்காக தேர்வு மையங்கள் டெல்லி உட்பட 33 இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்தேர்வு எழுதுவோர் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 3 முதல் ஜூன் 15 தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment