TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், 4 ஆயிரம் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், 4 ஆயிரம் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தகுதியுள்ள ஆசிரியர்களின் தற்காலிக பெயர் பட்டியல்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது.



இதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், பதவி உயர்வு வழங்கப்பட உள்ள எண்ணிக்கையைவிட கூடுதலாக பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். இதனால் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மீண்டும் பட்டியல் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பதவி உயர்வு வழங்க தகுதியுள்ள ஆசிரியர்கள் 11+1+3 மற்றும் 10+2+3படி படித்திருக்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும். அப்படி படிக்காதவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். அத்துடன் அவர்கள் பெற்ற கல்வியின் இணைத் தன்மை குறித்து தெரிவிக்க வேண்டும். இணைத் தன்மை இல்லாத பட்டங்களை பெற்றுள்ள ஆசிரியர்கள் இருந்தால் அவர்கள் குறித்தும் விவரம் அனுப்ப வேண்டும். 

பதவி உயர்வு வழங்குவதற்கு உள்ள நிபந்தனையை பொருத்தவரையில், 5 ஆண்டுக்கு மேல் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி இருந்து, மீண்டும் பட்டதாரி ஆசிரியராக பணிக்கு திரும்பி மீண்டும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய பிறகே உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்க்க முடியும். இந்த நிபந்தனைகளை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டுகளில் தகுதியுள்ள ஆசிரியர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்காமல் மறைத்து இருந்தால் அவர்கள் பெயர் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இளநிலை இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், கூடுதல் பட்டம் பெற்றவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க கூடாது. பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் அவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அப்படி அல்லாமல் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டால் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலக எழுத்தர், கண்காணிப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பாவார்கள். இவ்வாறு பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4000 ஆசிரியர்கள் மீது ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை 17பி நோட்டீஸ் மற்றும் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதனால் அந்த 4000 ஆசிரியர்கள் பெயர்களை பதவி உயர்வு பட்டியலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சேர்க்காமல் உள்ளனர். இதனால் 4000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment