கோடை விடுமுறைக்குப் பிறகு, 2019-20-ம் கல்வி ஆண்டில் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் தொடங்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் நிச்சயமாகத் தொடங்கும் என்று அறிவித்து, குழப்பங்களைத் தீர்த்தார். இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், பள்ளித் திறக்கும் நாளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன், "வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களுக்கு சின்னம்மை மற்றும் சரும நோய்கள் ஏற்படாமல் உடல்நலம் காக்க வேண்டும். மேலும், வெயில் கடுமையாக, மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர்த் தட்டுப்பாடும் அதிகமுள்ளது.
பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டி 106 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. அனல்காற்றும் வீசுவதால், பெரியவர்களே வெளியில் செல்ல முடியாத நிலையில் மாணவர்கள் எப்படி இந்த வெயிலைத் தாங்க முடியும். எனவே, கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ம் தேதியில் பள்ளித் திறப்பதை, இரண்டு வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை தள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
http://dhunt.in/6dupP?s=a&ss=wspவிகடன் இதழில் வெளிவந்த இந்த செய்தியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
0 Comments:
Post a Comment