சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதியோரில் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 மற்றும் நிலுவைப்பாடங்கள், பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது.
தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மறுகூட்டல் செய்யவும், மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்த மாணவர்களின் பதிவெண் பட்டியல்கள் scan.tndge.in என்ற இணைய தளத்தில் 27ம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களின் விடைத்தாளில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment