வரும் ஜூன் மாதம் யுஜிசி நெட் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று யுஜிசி-யின் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட தேசிய தகுதி காண் தேர்வே நெட். இதற்கு முன்பு வரை பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை யுஜிசி-யும், அதன்பிறகு சிபிஎஸ்இ-யும் நடத்தி வந்த இந்நிலையில், நடப்பு ஆண்டு நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை முதல் முறையாக நடத்த உள்ளது.
இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இங்கே பெறலாம்.
இதனிடையே, இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை ntanet.nic.in அல்லது மேலே உள்ள லிங்க்கிளைக் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பாடத்திட்டம் மாற்றம்
நெட் தேர்வுக்கான பாடத்திட்டம் மொத்தமும் தேசிய தேர்வு முகமை மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது அறிவு தேர்வு தாள்-1 உட்பட அனைத்து பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் யூஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment