TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

எல்ஐசி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அதிகாரி பணிகள்: 8,581 காலியிடங்கள்!



இந்தியாவிலுள்ள பல்வேறு மண்டலங்களில் இருக்கும் எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர்
மண்டலம் வாரியாக காலியிடங்கள்: 
போபாலை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டலம்- 525 
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மண்டலம் - 922 
பாட்னாவை தலைமையிடமாக கொண்ட கிழக்கு மத்திய மண்டலம் - 701 
புதுடெல்லியை தலைமையிடமாக கொண்ட வடக்கு மண்டலம் - 1,130 
கான்பூரை தலைமையிடமாக கொண்ட வடக்கு மத்திய மண்டலம் - 1,042 
சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு மண்டலம் - 1,257 
ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்ட தெற்கு மத்திய மண்டலம் - 1,251 
மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலம் - 1,753
மொத்தம் = 8,581 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 20.05.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.06.2019 
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கிய நாள்: 20.05.2019 
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 09.06.2019 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 06.07.2019 & 13.07.2019 
முதன்மைத் தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 10.08.2019
தேர்வுக்கட்டணம்: 
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.50 
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600
வயது வரம்பு: 
விண்ணப்பதாரர்களின் வயதானது 01.05.2019-க்குள், 21 வயது முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
ஊதியம் / ஊக்கத்தொகை:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில், ரூ.21,865 முதல் ரூ.55,075 வரை மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
க்ளாஸ்'ஏ' நகரத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ரூ.37,345 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/licadomay19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
4. மருத்துவ தகுதி தேர்வு
பயிற்சி காலம்: ஒரு வருடம் / இரண்டு வருடங்கள்
மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
source puthiyathalaimurai
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment