ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட்டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சியில் இயங்கும் பாரதியார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் ஜோதிகா, அன்புச்செல்லவி, அபர்ணா உள்ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எங்களுக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அரசு கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணமே உதவித்தொகையாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
உதவித்தொகை வழங்கும் திட்டமே ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுப்பது சட்டவிரோதமாகும். எனவே கல்வி உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு நிர்ணயம் செய்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுதாரர்களான மாணவிகள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது என கருத்து தெரிவித்ததோடு, கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

0 Comments:
Post a Comment