சண்டிகரில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 196 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 196
பணி: Trained Graduate Teachers (TGTs)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Hindi - 13
2. English - 27
3. Science (Med) - 19
4. Science (NM) - 47
5. Maths - 34
6. Social Science - 46
7. Punjabi - 19
சம்பளம்: மாதம் ரூ.45,756
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruit.nitttrchd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2019
0 Comments:
Post a Comment