TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ரூ 80000 சம்பளத்தில் வேலை ..அழைக்கிறது நிதி ஆயோக்


இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) - NITI - National Institution for Transforming India)) (கொள்கைக் குழு) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார். 
இந்த அமைப்பில் நிரப்பப்பட உள்ள 82 Innovation Lead, Monitoring & Evaluation Head, Young Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பதவி: Innovation Lead
காலியிடங்கள்: 12
பணி: Monitoring & Evaluation Head
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 1,45,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர் அப்பிளிகேஷன், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் அல்லது சிஏ, சிஎஸ்ஐ, ஐசிடபுள்யூஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional 
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிஇ, பி.டெக் அல்லது மோலாண்மை துறையில் 2 வருட முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிபிஎஸ் அல்லது எல்எல்பி அல்லது சிஏ, ஐசிடபுள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.niti.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: தேதி: 02.06.2019
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment