TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசுப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் 17.5.2019 மாலை 4 மணிக்குள் அளிக்கவேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் மே 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். கலந்தாய்வு மே 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் மே 27-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.


இதற்கான கலந்தாய்வு மே 28-ஆம் தேதி நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தகுதிப் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் மே 29-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் இதற்கான கலந்தாய்வு 30-ஆம் தேதி நடத்தப்படும். 11-ஆம் வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர்களை தொடர்புகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment