மாவட்ட வாரியாக உள்ள சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்கள் கோரப்பட்டு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளது. இதுவரை அனுப்பாத மாவட்டங்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுடன் உடனடியாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களில் வரும் மே 31-ஆம் தேதியன்று சிறப்பாசிரியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப் பணியிட விவரங்களை ஓய்வுபெற்ற நாளுடன் தெளிவாகக் குறிப்பிட்டு காலிப் பணியிடங்கள் ஏதும் விடுபடவில்லை என்ற சான்றுடன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணிபுரிவோர் எண்ணிக்கை, தற்போதைய நிலவரப்படி காலிப் பணியிட விவரங்கள் ஆகியவற்றினை புள்ளிவிவரத்துடன் அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment