தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே இந்திய மாணவர் சங்கம் சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
அதனை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இதனை சரியாக பயன்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும், அரசும் ஊர்கூடி தேர் இழுக்கவேண்டியிருப்பதாகவும் கூறினார்.
0 Comments:
Post a Comment