TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அடிப்படை வசதிகள் கூட இல்லாத 700க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மூடல்- பள்ளிக் கல்வி இயக்ககம் அதிரடி!!

தமிழகத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வருவதால் அவற்றை விரைவில் மூடுவதற்கு பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டுமே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் உள்ளன.

நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் நடத்துவதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் அனுமதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடத்துவதற்காக மெட்ரிக் இயக்குனரகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் இடவசதி, பாதுகாப்பு வசதி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு, அரசு நிர்ணயிக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்று இருந்தால் அனுமதி வழங்கப்படும். அதாவது, மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் 30 முதல் 35 சென்ட் இடங்களும், போதுமான குடிநீர் தீயணைப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த இட வசதியானது நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுபடும். அதாவது, ஒன்றிலிருந்து மூன்று ஏக்கர் வரை நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அதன்பிறகு ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் ஒரு முறையும் பள்ளிகளின் மூலம் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பின்னர் ஒப்புதல் புதுப்பிக்கப்படும்.
தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி பின்தங்கி இருக்கின்றன.
அதில் குறிப்பாக 1000 முதல் 1,200 பள்ளிகள் திருத்தியமைக்கப்பட்ட போதுமான இடவசதி மற்றும் சுகாதார வசதிகள் இருக்கின்றன. ஆனால் மீதமுள்ள 700க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத அளவிற்கு பின்தங்கி இருக்கின்றன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மே மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு, அதற்குள் பொதுவான அடிப்படை வசதிகளை செய்ய தவறிய பள்ளிகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இதில் அதிகபட்சமாக திருப்பூர் மற்றும் கோவை இரண்டு பெருநகரங்களிலும் சேர்த்து 100க்கும் மேற்பட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நர்சரி பள்ளிகள் இருக்கின்றன. அதற்கு, அடுத்ததாக சென்னையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் ஆரம்ப வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment