4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் "பாட வாரியாக 4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களில் ஆயிரத்து 500 க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு கிடையாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source thanthi news
Share
0 Comments:
Post a Comment