பிளஸ் 1 விடைத்தாள் நகல்கள் இன்று முதல் இணைய தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ேதர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில் பங்கேற்க மாணவ, மாணவியர் அந்த தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் விடைத்தாள்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அப்படி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்களை எடுத்து இன்று பிற்பகல் 2 மணி முதல் 23ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதன்படி மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடம் மட்டும் ₹305, மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) ₹205 செலுத்த வேண்டும். அதேபோல மறு மதிப்பீடு செய்வதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ₹505 செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment