தற்காலப் பணியிடங்களில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர்களுக்கு பணி தொடர்நீட்டிப்பு ஆணை வழங்கிடுகதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கைமாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :
தற்காலிகப் பணியிடங்கள் பத்து ஆண்டுகள் கடந்தும் நிரந்தரப் பணி ஆசிரியர்கள் தலைமையாசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்பட்டுவருகிறது.ஆனால் ஒவ்வொரு முறையும் தொடர்பணி நீட்டிப்பு ஆணைக்காக காத்திருந்து சம்பளம் பட்டியல் அனுப்பப்பட்டுவருகிறது.இதனால் பலமுறை குறிப்பிட்டத் தேதியில் சம்பளம் கிடைக்காமல் வீட்டுத்தவணை வீட்டு " வாடகை கட்டமுடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகிறார்கள். தற்போதுகூட 8462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்கூட SSA மூலமாக அரசாணை 193 ன்படி நியமனம் செய்யப்பட்ட 1282 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்திற்கு தொடர்நீட்டிப்பு ஆணை வழங்கப்படவில்லை. இதுபோன்று ஐம்பதாயித்திற்கும் மேற்பட்டவர்கள் ஒவ்வொருமுறையும் பணிசெய்ததற்கான சம்பளம் பெறுவதற்கே மனஉளைச்சலுக்கு தள்ளுகிறது. எனவே தற்காலிப் பணியிடங்களை நிரந்தரப்பணியிடங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்பதை குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறை தொடர்நீட்டிப்பு ஆணைவழங்கிட நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment