கடந்த மே 5ம் தேதியன்று நடைபெற்று முடிந்த நீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இதனை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தற்போது, இத்தேர்வுக்கான விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதனை தேர்வர்கள் www.ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதற்கு விண்ணப்பிக்கலாம். விடை திருத்தத்திற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். நாளை இரவு 11.50 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விடைத்தாள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
நீட் விடை குறிப்புகள் பெறுவதற்கான வழி முறைகள்:
- www.ntaneet.nic.in என்னும் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- விண்ணப்ப பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
- "அப்ளே கீ சேலஞ்ச்" என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்
- அங்கே, உங்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களின் வினா விடைகள் வழங்கப்பட்டிருக்கும்
- அவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், அதனை கிளிக் செய்து முறையிடு செய்யலாம்.
0 Comments:
Post a Comment