அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழுவின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
''தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (www.tanuvas.ac.in) மூலம் கடந்த மே 8 காலை 10 மணி முதல் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
இதில் மே.16 வரை கால்நடை மருத்துவ (BVSc & AH) பட்டப்படிப்பிற்கு 7488 மாணவ / மாணவிகளும் BTech பட்டப்படிப்புகளுக்கு 1268 மாணவ / மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 10 மாலை 5.45 மணி.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் ஜூன் கடைசி வாரத்தில் வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும். அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினருக்கான இடங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in) விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர கடைசி தேதி ஜூலை 01-ம் தேதி மாலை 5.45 மணி ஆகும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment