TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


 அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அரசு சட்ட கல்லுாரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், ஜனவரியில் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு, நேர்முக தேர்வை நடத்தியது.அதில், தேர்ச்சி பெற்று, பணியில் சேர தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. இதில், 150 பதவிகளுக்கான உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களின் பதிவு எண் விபரங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்,http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment