TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இன்று முதல் விற்பனை: ஆர்வமுடன் வாங்கிச் சென்ற மாணவர்கள், பெற்றோர்



கடந்த ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் தவிர, திருத்தப்பட்ட மற்ற பாடப்புத்தகங்களின் விற்பனை இன்று முதல் தொடங்கியது. பெற்றோர், மாணவர்கள் ஆர்வத்துடன் பாடப்புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் பழைய பாடத்திட்ட முறை மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது .

அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 7, 8,10,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து பாடப்புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பாடநூல் கழக விற்பனை நிலையத்தில் இன்று பாடப்புத்தகங்களின் விற்பனை தொடங்கியது. பெற்றோர்கள், மாணவர்கள் விற்பனை தொடங்கிய முதல் நாளான இன்று ஆர்வத்துடன் பாடப்புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
1 முதல் 12-ம் வகுப்பு வரை 390 தலைப்புகளில் 5.43 கோடி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 60 சதவீத ப் புத்தகங்கள் இலவசமாகவும், 40 சதவீதப் புத்தகங்கள் விற்பனைக்கு வழங்கப்படும்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறையும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பருவத் தேர்வு முறையும் கடைபிடிக்கப்படுகிறது..
12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு வால்யூம் 1 மற்றும் வால்யூம் 2 என இரு புத்தகங்களும், உயிரியல், புள்ளியியல், புவியியல் படங்களுக்கு வால்யூம் 1 என்கிற அடிப்படையில் 1 புத்தகமும் வழங்கப்பட உள்ளது. புதிய பாடப்புத்தகங்களுக்கான விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களுக்கான விலை
தமிழ் - ரூ.120
ஆங்கிலம் - ரூ.130
கணிதம் - ரூ.170
இயற்பியல் - ரூ.180
வேதியியல் - ரூ.160
தாவரவியல் - ரூ.170
விலங்கியல் - ரூ.170
அக்கவுன்டன்சி - ரூ.160,
கணக்குப் பதிவியல் - ரூ.180.
2, 3, 4, 5, 7 - வகுப்புக்களுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் போதே அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment