TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்!


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவிதமான இடஒதுக்கீடும் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
CBSC நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து CBSC கடந்த ஜனவரி மாதம் விளம்பரம் செய்தது. இந்த அறிவிப்பில் "மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விளம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டி காட்டி., ஆசிரியர் தகுதி தேர்தில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும், அந்த "தகுதிச் தேர்வுகளுக்கு எக்காரணம் கொண்டும் இடஒதுக்கீடு வழங்க இயலாது. அது முற்றிலும் தவறானதாகிவிடும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்ற நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக CBSC வெளியிட்டுள்ள அறிக்கையில் ''எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எந்தவொரு இடஒதுக்கீடும் கொடுக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது'' குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment