அண்ணா பல்கலைக்கழத்தின் மறுமதிப்பீடு திட்டத்தில் இதுவரை இருந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக நடத்தும் தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவரும், விடைத்தாள் திருத்திய ஆசிரியரும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் விவாதித்து புதிய மதிப்பெண் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
8-வது செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் எழுதும் 2 தேர்வுகளில், ஒரு தேர்வில் தோல்வியடைந்தால், ஒரே மாதத்தில் உடனடி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளுக்கான இளநிலை மற்றும் முதுகலை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பல்கலைக்கழக நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source தினமணி
0 Comments:
Post a Comment