+1, +2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. +1, +2 சிறப்பு துணைத் தேர்வு எழுத வரும் 9-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு அரசு தேர்வுத்துறை சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment