சென்னை, மே 16: 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது. கீழ் கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.aucoe.annauniv.edu
மாணவர்கள், பெற்றோர் மேற்கண்ட இணையதளத்தில் அக்டமிக் பெர்பார்மன்ஸ் ஆப் அபிலியேட்டட் காலேஜஸ் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
Academic Performance of Affiliated Colleges
0 Comments:
Post a Comment