8462 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கிடுக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462
ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், அவர்களுக்கு,
இன்னும் ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கான பணிநீட்டிப்பு ஆணை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஆணையில், மார்ச் மாதம் வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பணிநீட்டிப்பு தொடர்பான ஆணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால், மே மாதம் பிறந்து இருவாரம் கடந்தும், ஏப்ரல் மாதத்துக்கான
ஊதியம் மேல்நிலைப் பள்ளிகளில் 1,598 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்,
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆர்எம்எஸ்ஏ மூலம் 6,872
பட்டதாரி ஆசிரியர்கள் (16) மொத்தம் 8,462 ஆசிரியர்களுக்கு சம்பளமின்றி தவிக்கிறார்கள். இதனால், மே மாதம் பிறந்து இருவாரம் கடந்தும், ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், பணிநீட்டிப்பு ஆணைவாராமல் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டனர். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை நாடினால், இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் கூறுகின்றனர். வழக்கமாக, ஒரு பணி நீட்டிப்பு ஆணை காலம் முடிவதற்கு, ஒரு மாதத்துக்கு முன் புதிய ஆணை வெளியிடப்பட்டுவிடும். ஆனால், தற்போது ஒரு மாதத்துக்கு மேலாகியும், புதிய ஆணை வரவில்லை. இதனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.ஆகவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பளம் வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment