TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழக நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - தேர்வர்கள் கவனிக்க...

நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சில தேர்வுமையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது

அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரைஉள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் புதிய தலைமுறை


Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment