TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்க்கும் போது, இந்தாண்டு கடைசி இடத்திற்கு வந்தாலும், கடந்தாண்டை விட, 1.14 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில், பின் தங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வேலூர் மாவட்டம், 89.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக கடைசி இடம் பிடித்துள்ளது. இதனால் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி படிப்புகளில் வேலூர் மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்க்கும் போது, இந்தாண்டு கடைசி இடத்திற்கு வந்தாலும், கடந்தாண்டை விட, 1.14 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் கடைசி இடம் பிடித்துள்ளது.

50 ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதிய, இரண்டு மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. மாணவர்கள் வருகை பதிவு சரியாக இல்லாதது, கல்வி மீதான விழிப்புணர்வு குறைந்திருப்பது, பெற்றோரின் கவனிப்பின்மை ஆகியவைதான் தேர்ச்சி சதவீதம் குறைய காரணம். எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இட மாறுதல் போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source தினகரன் நாளிதழ்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment