TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

வெற்றியை, நெய்த அரசு பள்ளி மாணவர்: ஜே.இ.இ., தேர்வில் சாதனை

ஜே.இ.இ., தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் இணை நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். திருப்பூர்,கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த சபரிநாதன்,ஏப்ரலில் நடந்த, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், 91.29 சதவீதம் மதிப்பெண்பெற்றுள்ளார்.இதன் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து, தேர்ச்சி பெற்ற ஒரே மாணவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.சபரிநாதன் கூறியதாவது:தந்தை பொன்னுசாமி, தாய் தனலட்சுமி. இருவரும் நெசவுத் தொழிலாளர்கள். முதல் வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் தான் படிக்கிறேன்.
எதையும் மனப்பாடம் செய்ய பிடிக்காது. கருத்தை உள்வாங்கி, புரிஞ்சு படிப்பேன்.பத்தாம் வகுப்பில், 484 மார்க் கிடைச்சதும், பிளஸ் 2 தேர்விலும், அதிகமா வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.மொழிப் பாடங்கள் பிரச்னை இல்லை.இயற்பியல், வேதியியல், கணக்கு பாடத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்தேன்.காலை, 8:00 முதல் மாலை, 6:00 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ். ஆசிரியர் சொல்லித் தர்றது மட்டும் தான். ஜூன் மாசமே கல்வித்துறை, &'தொடுவானம்&' மூலமா, ஒவ்வொரு அரசு பள்ளியில், ஜே.இ.இ., - நீட் தேர்வுக்கு தகுதியுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத் தாங்க.

திருப்பூரில், ஜே.இ.இ., தேர்வுக்கு தேர்வாகிய இரு மாணவர்களில், நானும் ஒருவன்.பொதுத்தேர்வுக்கு தயாராகிட்டே, ஜே.இ.இ.,க்கும் படிச்சேன். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என்னை உற்சாகப்படுத்துனாங்க. இதனால், பிளஸ் 2வில், 573 மார்க் எடுத்து, ஸ்கூல் பர்ஸ்ட் வர முடிந்தது. ஜே.இ.இ., எழுதுன, 2 லட்சம் பேரில், 28 ஆயிரத்து, 206வது இடம் கிடைச்சது.ஜே.இ.இ.,யை ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி மொழியில் மட்டும் தான் எழுத முடியும். இதனாலேயே அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுறாங்க. கணக்கு, வேதியியல் பாட கேள்விகளை, ஆங்கிலத்தில் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.இயற்பியல் படிக்கும்போது, ஆங்கிலத்திலும் அர்த்தத்தை புரிந்து படித்தால், ஜே.இ.இ.,யில் எளிதாக வெற்றி பெறலாம். ஐ.ஐ.டி.,யில் நுழைந்து, &'இஸ்ரோ&'வில் பணிபுரிவதே என் லட்சியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment