TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

வேளாண் படிப்புகளில் சேர 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 68ஆவது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் 44ஆவது இடத்தையும், மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் வாயிலாக 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 14 உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலம் கீழ்க்காணும் 10 பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
பட்டப்படிப்புகள்: 
1. இளமறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்மை 
2. இளமறிவியல் (ஹானர்ஸ்) தோட்டக்கலை 
3. இளமறிவியல் (ஹானர்ஸ்) வனவியல் 
4. இளமறிவியல் (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல் 
5. இளம் தொழில் நுட்பம் (வேளாண்மைப் பொறியியல்) 
6. இளம் தொழில் நுட்பம் (ஹானர்ஸ்) பட்டுவளர்ப்பு 
7. இளம் தொழில் நுட்பம் (உயிர்த் தொழில் நுட்பவியல்) 
8. இளம் தொழில் நுட்பம் (வேளாண்மைப் பொறியியல்) 
9. இளம் தொழில் நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) 
10. இளம் தொழில் நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்)
முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.05.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2019 
விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வேண்டிய நாட்கள்: 10.06.2019 முதல் 12.06.2019 
சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 11.06.2019 முதல் 13.06.2019 
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 20.06.2019
வயது வரம்பு: 
01.07.2019 அன்று 21 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 
குறிப்பு: 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.300
கல்வித்தகுதி:
அடிப்படை கல்வித்தகுதியாக, 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் / கணினி அறிவியல் / மனையியல் போன்ற பாடப்பிரிவுகளில் பயின்று, தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், http://www.tnau.ac.in/ugadmission.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://tnau.ac.in/admission/2019/Admission_Press_Note_2019-20_Tamil.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
source puthiyathalaimurai.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment