டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 100 தமிழக மாணவர்கள் சேர்வதால் சொந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களின் வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால் மீண்டும் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி பேசி வந்தார்.
தமிழக மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசிய சர்ச்சை பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்தது, அரசியல்வாதிகள், கல்வியலார்கள், நடிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் கெஜ்ரிவால் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தானர்
இந்த நிலையில்,இன்று செய்தியளர்களை சந்தித்த கெஜ்ரிவால் தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் என நான் அறிவேன், தமிழர்கள் மாணவர்கள் குறித்து பேசுயதற்க்காக மன்னிப்பு கோரினார்
0 Comments:
Post a Comment