* உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒரு மாதம் வரை 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
* நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
* இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
* உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.
* அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
* முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
0 Comments:
Post a Comment