வாய்ஸ் கால் மூலமாக ஸ்மார்ட்போனில் மால்வேரை ஹேக்கர்கள் இன்ஸ்டால் செய்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உலகையே ஸ்மார்ட்போன் உள்ளங்கையில் அடக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வாட்ஸ்அப் பயனாளர்களாக இருப்பார்கள். வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் சாட் செய்யும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப், வீடியோகால், குருப் சாட் எனப் பயனாளர்களுக்கு யூஸர் ஃப்ரியாக உள்ளது.
இந்நிலையில் வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நீண்டகாலமாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே அப்டேட் செய்து விடுங்கள். அப்டேட் செய்யப்படாத வாட்ஸ் அப்களைத்தான் ஹேக்கர்கள் குறிவைக்கிறார்கள். இதில், பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதால் எளிதில் ஹேக்செய்துவிடுகிறார்கள். உங்கள் மொபைலில் ஹேக்கர்கள் ஊடுருவுவது உங்களுக்கே தெரியாது. குறிப்பிட்ட மென்பொருள் தானாக உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன.
வாட்ஸ் அப் கால் மூலம் ஹேக்கர்கள் பயனாளர்களின் மொபைலில் ஊடுருவுவதாக எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். நீங்கள் அந்த காலை அட்டெண்டு செய்யாமல் விட்டாலோ அல்லது ராங் கால் என நீங்கள் கடந்து போனாலோ உங்கள் மொபைலில் குறிப்பிட்ட மால்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும். அது உங்களுக்குத் தெரியாது; அதேபோல், அந்த அழைப்பு கால் ஹிஸ்டிரியில் பதிவாகாது எனக் கூறப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட மால்வேர், ஸ்மார்ட் போன் பயனாளர்களின் இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதாகவும் புகார் கிளப்பியிருக்கிறார்கள். வாட்ஸ் அப் தனது பயனாளர்களை உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓஎஸ் இயங்குதளங்களில் இந்த மால்வேர் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ``அரசு நிறுவனங்களுக்கு உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்களைத் தயாரித்து அளிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் கைவரிசைதான் இது என்று தெரியவந்திருக்கிறது. பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களைத் தாக்கி, அதன் இயங்குதளத்தின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அந்த மால்வேர் செயல்படுவதாகத் தெரிகிறது'' என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல், அந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைத் தற்போது சரிசெய்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் வாட்ஸ் அப், கடந்த 10ம் தேதி இதற்கான அப்டேட்டை வெளியிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன் பயனாளர்களே உங்கள் வாட்ஸ் அப் செயலி அப்டேட்டடாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி இல்லாதபட்சத்தில் உடனடியாக அதை அப்டேட் செய்துவிடுங்கள்.
0 Comments:
Post a Comment