பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் : பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவரின் டி.சி.யில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டுமென்பதையும் தவிர்த்தல் நன்று. இந்நடவடிக்கை எதிர்காலத்தில் சாதிகளில்லா சமுதாயம் அமைந்திடவும், மாணவர்களின் மனநிலை மாற்றிடவும் வழிவகுக்கும். பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றியுடன் வரவேற்று மகிழ்கிறது.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment