சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்று வெளியான செய்தி தவறானது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார்.பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்ணை 600 - ல் இருந்து ஐநூறாக குறைக்கும் திட்டமும் இல்லை. அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை.
இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
0 Comments:
Post a Comment