ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியில் நீடிக்கவும் அனுமதிக்கக் கூடாது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு அது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி 2 வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், நோட்டீஸ் பெற்று 10 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பேறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது கருணைக் காட்டக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 8 ஆண்டுகள் ஆன நிலையில், 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamani
0 Comments:
Post a Comment