தனியார் பள்ளிஆசிரியர்கள் மீது நடவடிக்கை - திசைதிருப்பும் முயற்சி
1500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திடுக
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :
23.08.2010 முதல் 16.11.2012 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 9000 க்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் ( சிறுபான்மை பள்ளிகள் ஆசிரியர்களுக்கு விலக்கு ) என்ற நிபந்தனை பணிநியமனம் செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான பிறகே அறிவுறுத்தப்பட்டது.மேலும், அரசு இதுவரை கடந்த 8 ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1500 ஆசிரியர்களின் வாழ்க்கைத் திருடப்படுகிறது.உயர்நீதிமன்றம் தீர்ப்பு இன்னும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அரசு அறிவித்தது போல முறையாக ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தியிருந்தால் இன்றைக்கு ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு முறைமட்டும் தேர்வு நடத்திவிட்டு , தற்போது தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணித்தொடரமுடியும் அறிவிப்பு ஆசிரியர் மட்டுமில்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களும் துயரத்தில் மூழ்கியுள்ளது.
.எனவே ஆசிரியர் அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து 1500 குடும்பங்களை காப்பாற்றிட நடவடிக்கைக்குப் பதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத தனியர் பள்ளிகளில் பணிபுரியும் 28,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக பள்ளிக்கல்வித்துறை பிரச்சினையினை திசைதிருப்பும் முயற்சியினை மேற்கொண்டுவருவது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.தனியர் பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் நிரந்தரமாக பணிபுரிந்ததாக பதிவில்லை.ஏன் கல்வி அடிப்படைத் தகுதியான B.Ed., படிக்காமலேயே சில பள்ளிகளில் இருக்கிறார்கள்.இன்னும் ஒருபடி மேலே சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தியபிறகு பெரும்பாலான பள்ளிகளில் 9 ஆம் வகுப்புவரை அரசு பாடத்திட்டங்களை பின்பற்றபடவில்லை, அரசு விதித்த கட்டணங்கள் மேலாகவே வசூலித்து வருவது என்பதே நிதர்சன உண்மை.எனவே, மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் 1500 குடும்பங்களை காப்பாற்றிட மனிதநேயத்தோடு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment