TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு


முக்கிய தேதிகள்:
பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 06.06.2019 முதல் 13.06.2019 வரை
பிளஸ்-1 (பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்) சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 14.06.2019 முதல் 21.06.2019
தனித்தேர்வர்கள் கவனத்திற்கு:
நடைபெற்ற மார்ச் 2019 பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள் மற்றும் பிளஸ்-1 2018 மார்ச் / ஜுன் பருவத்தேர்வுகளில் வருகை புரியாத, தேர்வெழுதி தேர்ச்சிப்பெறாத பாடங்களை (+1 Arrear Subjects), மார்ச் 2019 இல் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் / தேர்விற்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர் நடைபெறவிருக்கும் ஜூன் 2019 பிளஸ்-2 / பிளஸ்-1 (பழைய பாடத்திட்டம்) சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட தேர்வர்களுள், ஜூன் 2019 பிளஸ்-1 (பழைய பாடத்திட்டம்) / பிளஸ்-2 சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், ஆன்லைனில் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் / தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 03.05.2019 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 08.05.2019 (புதன்கிழமை) பிற்பகல் 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (09.05.2019) மற்றும் நாளை மறுநாள் (10.05.2019) வரை நீட்டித்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தட்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்க மே மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
குறிப்பு:-
1. பிளஸ்-1 (+1) பொதுத்தேர்வினை பொதுத்தேர்வினை, பழைய பாடத்திட்டத்தில் (Old Syllabus) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் மற்றும் வருகை புரியாதோர், தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் மற்றும் வருகை புரியாதோர், வருகை புரியாத / தேர்ச்சி பெறாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தில் (Old Syllabus) தேர்வு எழுத ஜுன் 2019 சிறப்புத் துணைத்தேர்வே இறுதியான வாய்ப்பாகும்.
2. பிளஸ்-2 (+2) பொதுத்தேர்வினை பழையப் பாடத்திட்டத்தில் (Old Syllabus) தேர்வு எழுதவும், பழைய நடைமுறையின்படி (Old Pattern) (மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதவும் ஜூன் 2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும்.
பிளஸ்-1 (பழைய பாடத்திட்டம்) / பிளஸ்-2 (600 மதிப்பெண்கள் – New Pattern) பொதுத்தேர்வில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்கான அறிவிப்பு:
1. செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் (வருகை புரியாதோர்), எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டில் மொத்தம் 35 மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், உடனடி சிறப்புத் துணைத் தேர்வின்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அத்தேர்வர்கள் எழுத்துத் தேர்வினை மீண்டும் எழுத இயலாது.
2. செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் (வருகை புரியாதோர்), எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் மொத்தம் 35 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், உடனடி சிறப்புத் துணைத் தேர்வின் போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்க வேண்டும்.
3. செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், எழுத்துத் தேர்வினை மட்டும் எழுதினால் போதுமானது. அத்தேர்வர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை.
செய்முறைத் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/- )மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50/- சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு சிறப்பு துணைத்தேர்வுகளுக்கான கால அட்டவணையினை http://www.dge.tn.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று
காணலாம்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment