TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்:
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். இதேபோன்று பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment