TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஆசிரியர் தகுதி தேர்வில் ஜுன் மாதம் கட்டாயமாக தேர்ச்சிப்பெற்றாலே பணி தொடரமுடியும் என்ற செய்தி 1500 ஆசிரியர் குடும்பங்களில் இடி விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.


அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரியும் 1500 ஆசிரியர்களின் குடும்பங்களை காப்பாற்றிடுக. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
 ஆசிரியர் தகுதி தேர்வில் ஜுன் மாதம் கட்டாயமாக தேர்ச்சிப்பெற்றாலே பணி தொடரமுடியும் என்ற செய்தி 1500 ஆசிரியர் குடும்பங்களில் இடி விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.

2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 9000 க்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்.ஆனால் அரசு இதுவரை கடந்த 5  ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு   அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1500  ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்
பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் அறிக்கை இன்னும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அரசு அறிவித்தது போல முறையாக ஆண்டுக்கு இருமுறை என 10 தடவை தேர்வு நடத்தியிருந்தால் இன்றைக்கு ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு முறைமட்டும் தேர்வு நடத்திவிட்டு தற்போது ஜுன் மாதத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணித்தொடரமுடியும் அறிவிப்பு ஆசிரியர் மட்டுமில்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களும் துயரத்தில் மூழ்கியுள்ளது.மேலும் தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என ஒவ்வொரு பாடத்திலும் தனித்தன்மையாக. விளங்கி 10 ஆம் பொதுத்தேர்வில் 100% வெற்றித்தந்த ஆசிரியர்களுக்கு அவர்தம் பாடத்தில் தேர்வு நடத்தினால் 100% வெற்றிப்பெறுவார்கள். ஆனால் 8 ஆண்டுகள் தமிழ் பாடம் நடத்தியவர்கள் திடிரென்று அனைத்து பாடத்தையும் எழுதசொல்வது- கண் மருத்துவரை இதயம் மருத்துவத்தை பார்க்க சொல்வது போல. 
.எனவே ஆசிரியர் அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில்  பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து 1500 குடும்பங்களை காப்பாற்றிட கருணையுடன் நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment