தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தது நன்றி. மகிழ்ச்சியளித்தாலும் அனைவரும் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மே மாதம் முதற்கொண்டு சம்பளம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் நாங்கள் எடுக்கும் பாடத்தில் மட்டும் கேள்விகள் கேட்பதாக இருந்தால் பரவாயில்லை. குறிப்பாக தமிழில் ஏழு ஆண்டுகளாக பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியளித்தாலும் TET தேர்வில் கணிதம் அறிவியல் உள்ளிட்ட பாடக்கேள்விகளுக்கு பதிலளிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். உதாரமாக கண் மருத்துவரை இதயம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்வதற்கு இணையாகும். ஆசிரியர்களின் மனநிலையும் நடைமுறை சிக்கலையும் உணர்ந்து ஏழு ஆண்டுகளாக பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தரத் தீர்வாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து உதவிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே இளமாறன்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
0 Comments:
Post a Comment