வாக்குப்பதிவு நிலவரம் அறிய மொபைல் ஆப்: தேர்தலை ஆணையம் வெளியிட்டுள்ளது.
17வது மக்களவையைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு மொபைல் அப்ளிகேஷன் மூலம் வாக்காளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உதவுகிறது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பதற்கும் புகார்களை தெரிவிப்பதற்கும் ‘cVIGIL’ என்ற மொபைல் அப்ளிகேஷனை அளிக்கிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் உதவி பெற பி.டபிள்யூ.டி. (PWD) என்ற அப்ளிகேஷன் இருக்கிறது.
வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கும் உதவி செய்ய சுவிதா என்ற அப்ளிகேஷன் உள்ளது. இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேடை அமைத்து பிரசாரம் செய்யவும், வாகனங்களில் பிரசாரம் செய்யவும், கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்தவும் உதவுகிறது.
இந்நிலையில், புதிதாக Voter Turnout என்ற அப்ளிகேஷன் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எந்த நேரத்திலும் இதுவரை எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என அறிய முடியும்.
மாநில வாரியாகவும் தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு நிலவரத்தை அறிந்துகொள்ள வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது இது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் கிடைக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து மொபைல் அப்ளிகேஷன்களும்
0 Comments:
Post a Comment