TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையர் விளக்கம்

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புயல் உருவாக இருப்பதால் தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர்சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் புயல் பாதிப்புக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 29ம் தேதி உருவாகும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் 90 கி.மீ வரை காற்றுவீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக முன்கூட்டிய முக்கியப் பகுதிகளில் தேவைக்கு ஏற்றவாறு பேரிடர் மீட்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள். இந்த மீட்பு குழுவில் தேசிய மாணவர் படையையும் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிப்பு உள்ளாகும் மாவட்டங்களை கண்டறிந்து, கூடுதல் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும், அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புயல் ஏற்படுவதற்கு முன்னரே, முக்கியப் பகுதிகள் மற்றும் வீடுகளில் நீர்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப் அறிவுறுத்தப்படும். தவிர, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு படகுகளை எடுத்துச் செல்ல வேண்டாம்.
நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், மருந்துகளை இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களை இடமாற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

புயலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களுக்கு அரசு கட்டங்கள், தனியார் கட்டங்களையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என சத்யகோபால் கூறினார்.
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment