'டிஸ்லெக்சியா எனப்படும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக, தமிழக பள்ளி கல்வித் துறை, பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அமைப்புடன் இணைந்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோல, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அமைப்புடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி.,யும் புதிய பாடத் திட்டம் மற்றும் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.இந்த படிப்பை, மத்திய அரசின் ஆன்லைன் படிப்பு தளமான,
https://onlinecourses.nptel.ac.in
என்ற, இணையதளத்தின் வாயிலாக படிக்கலாம்.
பாடத் திட்டத்தையும் பதிவிறக்கம் செய்யலாம்.இந்த படிப்பை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்கப்படும் என, சென்னை ஐ.ஐ.டி.,யும், டிஸ்லெக்சியா அமைப்பும் தெரிவித்துள்ளன.

0 Comments:
Post a Comment