TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யப்பட்ட கான்டாக்ட்களை அழிப்பது எப்படி?

உலகின் பிரபல சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் அதன் பயனர் விவரங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அரசாங்கங்கள் மட்டுமின்றி அதன் பயனர்களிடம் இருந்தும் ஃபேஸ்புக் சரமாறி கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக இதே நிலை நீடித்து வருகிறது. எனினும், ஃபேஸ்புக் நம்மிடம் இருந்து சேகரித்த விவரங்களில் சிலவற்றை எடுக்க நமக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மொபைல் போன் கான்டாக்ட்களும் அடங்கும்.
ஃபேஸ்புக் தனது வலைதளத்தில் கான்டாக்ட்களை அப்லோடு செய்வது பலரும் அறிந்திராத விஷயமாக இருக்கிறது.
சில சமயங்களில் இந்த வரிசையில் கால் அல்லது டெக்ஸ்ட் ஹிஸ்ட்ரியும் சேர்ந்து கொள்கிறது. எதுவாயினும், ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யப்பட்ட கான்டாக்ட் மற்றும் இதர தகவல்களை மீட்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
1 - வலைதளத்தில் பிரவுசர் ஒன்றை திறந்து அதில் https://facebook.com/mob என்ற இணைய முகவரியை திறக்க வேண்டும்.
2 - ஏற்கனவே லாக் அவுட் செய்திருந்தால் ஃபேஸ்புக்கில் மீண்டும் லாக்-இன் செய்ய வேண்டியிருக்கும்.
3 - வலைதளத்தில் Contacts, Calls மற்றும் Text History உள்ளிட்ட ஆப்ஷன்கள் இருக்கும்.
4 - இவற்றின் கீழ் இருக்கும் Delete All ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
5 - இவ்வாறு செய்ததும் உங்களது முடிவை உறுதிப்படுத்துவதற்கான பாப்-அப் திறக்கும். அதில் Delete பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை செய்து முடித்ததும், ஃபேஸ்புக் தரப்பில் இருந்து உங்களது கான்டாக்ட்களை அழிப்பதற்கான கோரிக்கை பரிசீலனை செய்யப்படுகிறது, இது நிறைவுற்றதும் உங்களுக்கு தகவல் கொடுக்கப்படும் என்ற தகவல் வழங்கப்படும். கான்டாக்ட்களின் மெமரி அளவை பொருத்து சில நிமிடங்களில் இது நிறைவுறும்.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோருக்கு மேலும் அதிகமானவர்களை நண்பர்களாக பரிந்துரைக்கவே கான்டாக்ட் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவிக்கிறது. பயனர் வழங்கும் கான்டாக்ட் விவரங்களை ஆய்வு செய்து அதனுடன் தொடர்புள்ள கான்டாக்ட்களை பரிந்துரைக்கும்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

1 Comments:

  1. Each and every current assessee or individuals who are required to archive an entry of pay, even in light of a legitimate concern for other people, must have a PAN. Any person, who intends to go into fiscal or budgetary trades where refering to PAN is necessary, ought to in like manner have a PAN.If you need more info you can use duplicate pan card, this is the best one.

    ReplyDelete