TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நீட் தேர்வுக்கு பெண்களுக்கு அளிக்கப்பட்ட புதிய சலுகை!! மகிழ்ச்சியில் மாணவிகள்!!

மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல்முறை என்பதால் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பலர் ஆடை கட்டுப்பாடு குறித்த விஷயத்தில் சில மாணவ மாணவிகள் கவனக்குறைவாக இருந்ததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மேலும் சிலரின் முழுக்கை ஆடைகள் கிழிக்கப்பட்டு, தேர்வறைக்கு முன்பே அரைக்கையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு குறித்த தகவல்களை சி.பி.எஸ்.இ ஆணையம் அறிவித்துள்ளது.
அதிக உயரம் கொண்ட ஹைஹீல்ஸ் செருப்புகள் அணியக் கூடாது, அதேபோல் ஷூவும் அணியக்கூடாது.மாணவிகள் தலையில் பூக்கள் வைக்கக்கூடாது, துப்பட்டா அணியக்கூடாது.
பெரிய பட்டன் கொண்ட ஆடைகள் மற்றும் பேட்ஜ் அணியக் கூடாது. அதுமட்டுமின்றி முழுக்கை ஆடைகளுக்கும் அனுமதி இல்லை.
மேலும், செல்போன் உள்ளிட்ட தொலைத் தொடா்பு சாதனங்களை தோவு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் ஆகிய பொருட்களுடன் தேர்வு அறைக்கு செல்ல அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தது.தற்பொழுது மாணவிகள் மட்டும் துப்பட்டா அணிந்து கொள்ளலாம் என சலுகை வழங்கியுள்ளது. சி பி எஸ் இ தேர்வாணையம்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment